
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்; சங்கராபுரம் தமிழ்ப் படைப்பாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ் படைப்பாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
அனைத்து பொதுசேவை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முத்துகருப்பன் தலைமை தாங்கினார்.
ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார், வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், தாமோதரன், சுதாகரன் முன்னிலை வகித்தனர்.
சங்கத்தின் புதிய தலைவராக வேலு, செயலாளராக சக்திவேல், பொருளாளராக ஆண்டப்பன், துணைத்தலைவராக கமலநாதன், ராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக தேர்வான நிர்வாகிகளுக்கு சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.