/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நீட்டிக்கப்பட்ட அரசு பஸ் சேவை எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
நீட்டிக்கப்பட்ட அரசு பஸ் சேவை எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
நீட்டிக்கப்பட்ட அரசு பஸ் சேவை எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
நீட்டிக்கப்பட்ட அரசு பஸ் சேவை எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : டிச 12, 2025 06:57 AM

ரிஷிவந்தியம்: பகண்டைகூட்ரோட்டில் நீட்டிக்கப்பட்ட அரசு பஸ் சேவையினை எம்.எல்.ஏ., கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பகண்டைகூட்ரோட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், நிர்வாகி சாமி சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து தினமும் மதியம் 3 மணியளவில் தடம் எண் 22 என்ற அரசு பஸ்சும், மாலை 6.10 மணியளவில் தடம் எண் 43 என்ற பஸ்சும் புறப்பட்டு தண்டலை, சூளாங்குறிச்சி, பழையசிறுவங்கூர் வழியாக மையனுார் வரை செல்கிறது. இதை பகண்டைகூட்ரோடு வரை இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில், இரண்டு பஸ்களின் வழித்தடமும் பகண்டைகூட்ரோடு வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், துவக்க விழா நேற்று நடந்தது.
நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் புதிய அரசு பஸ்களை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அப்போது, கள்ளக்குறிச்சி அரசு பஸ் டெப்போ மேலாளர்கள் நாகராஜன், குணசேகரன், தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் ராஜீ, செல்வக்குமார், வசந்திராஜா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

