/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நில அளவர்கள், வரைவாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கல்
/
நில அளவர்கள், வரைவாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கல்
நில அளவர்கள், வரைவாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கல்
நில அளவர்கள், வரைவாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கல்
ADDED : டிச 12, 2025 06:56 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குரூப்-4 தேர்வில் தேர்ச்சிப் பெற்ற நில அளவர்கள், வரைவாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் பிரசாந்த் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் தேர்ச்சிப் பெற்ற நில அளவர்கள் மற்றும் வரைவாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் பிரசாந்த் வழங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 11 நில அளவர்கள், 2 வரைவாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. இவர்கள், நிலங்களை அளவிடுதல், உட்பிரிவு செய்தல், பட்டா மாற்றம் செய்தல், நில ஆவணங்களை பராமரித்தல், கணினி மயமாக்கல் மற்றும் நில உரிமை முறைகளை முறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
எனவே புதிதாக தேர்வு செய்யப்பட்டு நில அளவர் மற்றும் வரைவாளர் பணியிடங்களைப் பெற்றவர்கள் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.
நில அளவைத்துறை உதவி இயக்குநர் கதிரவன், கோட்ட ஆய்வாளர்கள் வெற்றிவேலன் (கள்ளக்குறிச்சி), அந்தோணிதாஸ் (திருக்கோவிலூர்) உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

