/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மின்வேலியில் சிக்கி விவசாயி பலி
/
மின்வேலியில் சிக்கி விவசாயி பலி
ADDED : டிச 06, 2025 02:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு: கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த கானாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன், 55; அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை, 30 ஆண்டுகளாக குத்தகைக்கு விவசாயம் செய்து வந்தார்.
இதில், 5 ஏக்கர் இடத்தில் மக்காச்சோளம் விவசாயம் செய்தார். பயிரை விலங்கு களிடம் இருந்து பாதுகாக்க, விவசாய நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்தார்.
நேற்று காலை நிலத்திற்கு சென்றவர் எதிர்பாராத விதமாக மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். வடபொன்பரப்பி போலீசார் விசாரிக்கின்றனர்.

