/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் : 107 பேர் கைது
/
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் : 107 பேர் கைது
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் : 107 பேர் கைது
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் : 107 பேர் கைது
ADDED : டிச 05, 2025 05:56 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார்.
இணைச்செயலாளர் ரங்கசாமி வரவேற்றார்.மாவட்ட செயலாளர் ஆனந்தகிருஷ்ணன் கோரிக்கைகள் குறித்து பேசினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் பாண்டியன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் செந்தில், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் ரஹீம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொருளாளர் சாமிதுரை ஆகியோர் கோரிக்கைகள் மற்றும் மறியல் போராட்டம் குறித்து விளக்க உரையாற்றினர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புதல், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களை அரசு ஊழியர்களாக்குதல் உட்பட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காலை 11.30 மணியளவில் திடிரென கலெக்டர் அலுவலகம் எதிரே, கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு கோஷமெழுப்பினர்.
மறியல் செய்த 41 பெண்கள் உட்பட 107 பேரை போலீசார் கைது செய்தனர்.

