/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
/
விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
ADDED : டிச 05, 2025 05:55 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சிக்கு மருத்துவக்கல்லுாரி முதல்வர் பவானி தலைமை தாங்கினார். டாக்டர்கள் சண்முகப்பிரியா, பச்சையப்பன் முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் பொற்செல்வி, பழமலை ஆகியோர் எய்ட்ஸ் நோய் பரவும் விதம், நோயின் பாதிப்புகள், நோய் ஏற்பட்டால் என்ன செய்வது, நோயில் இருந்து தற்காத்து கொள்ளும் முறை, நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்காமல் உதவி செய்தல் குறித்து விளக்கி பேசினர்.
தொடர்ந்து, எய்ட்ஸ் நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் டாக்டர்கள், மருத்துவக்கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர். நிர்வாக அலுவலர் ஹரி நன்றி கூறினார்.

