/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மழையால் 24 வீடுகள் சேதம்: 5 கால்நடைகள் உயிரிழப்பு
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மழையால் 24 வீடுகள் சேதம்: 5 கால்நடைகள் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மழையால் 24 வீடுகள் சேதம்: 5 கால்நடைகள் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மழையால் 24 வீடுகள் சேதம்: 5 கால்நடைகள் உயிரிழப்பு
ADDED : டிச 05, 2025 05:51 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை பெய்த மழையில் 24 வீடுகளின் ஒரு பகுதி விழுந்து சேதமடைந்தது. 5 கால்நடைகள் உயிரிழந்தன.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இதில், மி.மீ., அளவில் கள்ளக்குறிச்சி-3, தியாகதுருகம்-10, விருகாவூர்-7, கச்சிராயபாளையம்-8, கோமுகி அணை-13, மூரார்பாளையம்-3, வடசிறுவள்ளூர்-3, கடுவனுார்-18, மூங்கில்துறைப்பட்டு-40, அரியலுார்-66, சூளாங்குறிச்சி-6, ரிஷிவந்தியம்-15, கீழ்பாடி-32, கலையநல்லுார்-6, மணலுார்பேட்டை-43, சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை-6, வாணாபுரம்-60, மாடாம்பூண்டி-63, திருக்கோவிலுார் வடக்கு-15, திருப்பாலப்பந்தல்-68, வேங்கூர்-32, பிள்ளையார்குப்பம்-25.20, எறையூர்-17, உ.கீரனுார்-29.30 என மாவட்டம் முழுவதும் 588.50 மி.மீ., அளவு மழை பெய்தது. மாவட்டத்தில் சராசரியாக 24.52 மி.மீ., மழை பதிவானது.
24 வீடுகள் சேதம்:
உளுந்துார்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கன மழை பெய்ததால் உளுந்துார்பேட்டை தாலுகாவில் 16 கூரை வீடு மற்றும் ஒரு மெத்தை வீட்டின் ஒரு பகுதி இடிந்து சேதமடைந்தது.
அதேபோல், கள்ளக்குறிச்சி தாலுகாவில் இருவரின் வீடுகள், திருக்கோவிலுார் தாலுகாவில் ஒருவரது ஓட்டு வீடு, வாணாபுரம் தாலுகாவில் மூன்று நபர்களின் கூரை வீடுகள், சங்கராபுரம் தாலுகாவில் ஒருவரது கூரை வீடு என 24 வீடுகளின் ஒரு பகுதி விழுந்து சேதமடைந்தது.
பசுமாடு, கன்று குட்டி உயிரிழப்பு உளுந்துார்பேட்டை தாலுகா, பூமாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பலராமன் மகன் கோவிந்தராஜ், திருப்பெயர் கிராமத்தை சேர்ந்த ராஜரத்தினம் மகன் சண்முகம் ஆகியோரது பசுமாடுகள் உயிரிழந்தது. மேலும், திருக்கோவிலுார் தாலுகா, மொகலார் கிராமத்தை சேர்ந்த கல்வராயன் மகன் பாவாடை, வாணாபுரம் தாலுகா, வெங்கலம் கிராமத்தை சேர்ந்த அன்னமேஸ்திரி மகன் சரவணன், கொங்கனாமூர் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் குமார் ஆகிய 3 நபர்களின் கன்றுகுட்டிகள் உயிரிழந்தன.

