/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி இந்திரா நகரில் குடிநீர் வீணாகும் அவலம்
/
கள்ளக்குறிச்சி இந்திரா நகரில் குடிநீர் வீணாகும் அவலம்
கள்ளக்குறிச்சி இந்திரா நகரில் குடிநீர் வீணாகும் அவலம்
கள்ளக்குறிச்சி இந்திரா நகரில் குடிநீர் வீணாகும் அவலம்
ADDED : டிச 05, 2025 05:50 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி இந்திரா நகரில் கூட்டு குடிநீர் பைப் லைன் உடைந்து தண்ணீர் சாலையில் வழிந்தோடி வீணாகி வருகிறது.
கள்ளக்குறிச்சிக்கு ரிஷிவந்தியம் கூட்டுக் குடிநீர் திட்ட மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கள்ளக்குறிச்சி மவுண்ட் கார்மல் பள்ளி அருகே இந்திரா நகரில் அந்த பைப் லைன் உடைந்த கடந்த 10 நாட்களுக்கு மேலாக தண்ணீர் சாலையில் வழிந்தோடி வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
இதனால் கடந்த 10 நாட்களாக அதிக பொருட்செலவில் கொண்டுவரப்படும் பல லட்சம் லிட்., தண்ணீர் சாலையில் வழிந்தோடி வீணாகி வருகிறது. எனவே பைப்லைன் பழுதை சீர் செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கைஎடுக்கவேண்டும்.