/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பைக் மோதிய விபத்தில் விவசாயி பலி பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு
/
பைக் மோதிய விபத்தில் விவசாயி பலி பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு
பைக் மோதிய விபத்தில் விவசாயி பலி பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு
பைக் மோதிய விபத்தில் விவசாயி பலி பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு
ADDED : நவ 05, 2025 07:49 AM
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு புதிய பாலத்தில் பைக் மோதிய விபத்தில் விவசாயி இறந்ததால், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், சதாகுப்பம் கிராமத்தை சேர்ந்த மாயவன் மகன் வெங்கடேசன், 42; இவரது மனைவி சுஜாதா, 38; மற்றும் வெங்கடேசன் சகோதரி மகன் மூங்கில்துறைப்பட்டு மோட்டூர் சுப்பிரமணியன் மகன் அன்பரசு,18; ஆகியோர் நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு, மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் புதிதாக கட்டப்பட்டு போக்குவரத்து இல்லாத மேம்பாலத்தில் காய வைத்திருந்த மக்காசோளத்தை அள்ளிக் கொண்டிருந்தனர்.
அப்போது, மூங்கில்துறைப்பட்டு சேர்ந்த கரீம் மகன் யாசின் அதிவேகமாக ஓட்டி வந்த பைக், சோளம் அள்ளிக் கொண்டிருந்த வெங்கடேசன் மற்றும் அன்பரசன் மீது மோதியது.
இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், வெங்கடேசன் இறந்தார். அன்பரசு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் விபத்து ஏற்படுத்தியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்த வெங்கடேசன் குடும்பத்திற்கு அரசு உதவ வேண்டும் என கோரி வெங்கடேசன் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று மதியம் 12:00 மணிக்கு, மேம்பாலத்தின் நடுவே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து 2:00 மணிக்கு போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, ஒரு கிலோ மீட்டர் துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

