/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த படிவம் வழங்கல்
/
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த படிவம் வழங்கல்
ADDED : நவ 05, 2025 07:50 AM

கள்ளக்குறிச்சி: குதிரைச்சந்தல் உள்ளிட்ட கிராமங்களில் வாக்காளர்களிடம் வாக்காளர் பட்டியல் திருத்த பணி படிவம் வழங்கும் பணி நேற்று துவங்கியது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான படிவம் வழங்கும் பணி நேற்று துவங்கியது. குதிரைச்சந்தல் கிராமத்தில் வருவாய் ஆய்வாளர் அண்ணாமலை உள்ளிட்ட அலுவலர்கள் வாக்காளர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று கணக்கெடுப்பு படிவத்தை வழங்கினர். இதனைத் தொடர்ந்து ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தங்களது பகுதிக்குட்பட்ட வாக்காளர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று, கடந்த 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை ஒப்பிட்டு, அவர்களின் தகவல்களை கேட்டறிந்து கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

