/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அணை, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பாண்டில் 42.89 செ.மீ., மழை
/
அணை, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பாண்டில் 42.89 செ.மீ., மழை
அணை, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பாண்டில் 42.89 செ.மீ., மழை
அணை, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பாண்டில் 42.89 செ.மீ., மழை
ADDED : டிச 23, 2024 05:27 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, நடப்பாண்டில் 42.89 செ.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் நெல், மக்காச்சோளம், கரும்பு, உளுந்து, மணிலா, பருத்தி உட்பட பல்வேறு வகையான வேளாண் மற்றும் தோட்டக்கலை சார்ந்த பயிர்களை விளைவித்து லாபம் ஈட்டி வருகின்றனர்.  மாவட்டத்தில் உள்ள கோமுகி மற்றும் மணிமுக்தா அணைகள் விவசாயத்திற்கு பெரிதும் உதவியாக உள்ளது. இதுதவிர பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2022ம் ஆண்டு 954.70 மி.மீ., (39.77 செ.மீ.,) மழை பெய்தது. அதேபோல், 2023ம் ஆண்டின் குளிர் பருவத்தில் 3.70 மி.மீ., கோடைக்காலத்தில் 184.90 மி.மீ., தென்மேற்கு பருவமழை பருவத்தில் 379.90 மி.மீ., வடகிழக்கு பருவமழை பருவத்தில் 199.10 மி.மீ., என மொத்தமாக 767.60 மி.மீ., ( 31.99 செ.மீ.,) என குறைந்தளவே மழை பெய்தது.
ஏற்கனவே நிலத்தடி நீர்மட்டம் குறைவாக இருந்ததால், பெரும்பாலான ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பவில்லை. குறிப்பாக, நடப்பாண்டில் கோடைக்காலம் துவங்கும் முன்னரே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், நீர்நிலைகளில் தேங்கியிருந்த தண்ணீர் விரைவாக வறண்டது.
நடப்பாண்டில் குளிர்பருவம், கோடைப்பருவத்தில் மழை இல்லாததால், விவசாயத்திற்கு தண்ணீரின்றி விவசாயிகள் பரிதவித்தனர். மேடான பகுதியில் உள்ள கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதால், மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதே நிலை நீடித்தால் வரும் 2025ம் ஆண்டில் அனைத்து கிராமங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை இருந்தது. ஆனால், நடப்பாண்டில் பெய்த தென்மேற்கு பருவமழை வறட்சியை சமாளிக்க ஓரளவு கைகொடுத்தது. தொடர்ந்து, வடகிழக்கு பருவ காலத்தில் ஏற்பட்ட பெஞ்சல் புயலால் அதிகளவு மழை பெய்தது. இதனால் அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பாண்டு முழுவதும் 1029.20 மி.மீ., (42.89) செ.மீ., அளவு மழை பெய்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அதிகளவு மழை பெய்ததால், கோமுகி மற்றும் மணிமுக்தா அணைகளும், பல்வேறு ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டி, உபரி நீர் கோடி வழியாக வெளியேறியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீர்நிலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை வீணாக்காமல், முறையாக பயன்படுத்திட வேண்டும்.

