/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
/
விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
ADDED : ஜூன் 09, 2025 11:36 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு சங்கங்களில் 'சிபில் ரிப்போர்ட்' பார்த்து கடன் வழங்க வேண்டுமென பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனு விபரம்:
கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பயிர் கடன் பெறுவதற்கு 'சிபில் ரிப்போர்ட்' பார்த்து கடன் வழங்க வேண்டுமென கூட்டுறவுத் துறையின் மாநில பதிவாளர் கடந்த மாதம் 26ம் தேதி உத்தரவிட்டு, சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
விவசாயிகளுக்கு வழங்கும் பயிர் கடனை தமிழக அரசு குறைத்து நிர்ணயம் செய்ததால், கூடுதல் செலவை சமாளிக்க தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்க்கடன் பெற வேண்டிய சூழ்நிலை உள்ளது.
விவசாயத்தில் போதுமான லாபம் இல்லாததால், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற பல்வேறு வகையான கடன்களை திரும்ப செலுத்த முடியாமல் விவசாயிகள் உள்ளனர். இதனால், கூட்டுறவு சங்கங்களில் மட்டுமே கடன் பெற வேண்டும்.
இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களில் பெறப்படும் கடனும் 'சிபில் ரிப்போர்ட்'டில் பதிவேற்றம் செய்தால், விவசாயிகள் கடன் பெற முடியாத அபாயம் உள்ளது.
கே.சி.சி., கடன் அட்டை மூலம் கடன் வழங்க 'சிபில் ரிப்போர்ட்' பார்க்க வேண்டும் என்ற வழிகாட்டுதலை இந்திய ரிசர்வ் வங்கி கொடுக்கவில்லை.
எனவே கூட்டுறவுத்துறையின் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.