ADDED : டிச 16, 2024 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார்.
போராட்டத்தை தொடர்ந்து, விவசாய சங்க நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று தாசில்தார் சசிகலாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவில் புயலால் பாதித்த பயிர்களுக்கு சாகுபடி செலவுகளுக்கு ஏற்ப நெல், மரவள்ளி, மக்காச்சோளம் ஆகிய பயிர்களுக்கு ரூபாய் 35 ஆயிரம், உளுந்துக்கு 10 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

