ADDED : மே 29, 2025 01:27 AM

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அடுத்த வீரபாண்டியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேல்மாறன் தலைமை தாங்கினார்.
விவசாய சங்க மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட தலைவர் தாண்டவராயன், நிர்வாகிகள் உமா மகேஸ்வரி, மா.கம்யூ., வட்டக் குழு உறுப்பினர் ராமமூர்த்தி, விவசாயிகள் சங்க வட்டத்தலைவர் நாகராஜன், தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கண்டாச்சிபுரம் தாசில்தார் முத்து தலைமையில், அரகண்டநல்லுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அடுத்த ஒரு வார காலத்தில் பாக்கி தொகையை வழங்கவும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.