தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/எப்.எப்.எஸ்., செயலியில் மானிய விலையில் உரம் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

எப்.எப்.எஸ்., செயலியில் மானிய விலையில் உரம் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

எப்.எப்.எஸ்., செயலியில் மானிய விலையில் உரம் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி


UPDATED : நவ 13, 2026 06:18 PM

ADDED : நவ 13, 2026 06:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 06:18 PM ADDED : நவ 13, 2026 06:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் எப்.எப்.எஸ்., செயலி மூலம் மானிய விலையில் உரம் பெறும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சிக்கு, வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) ஆனந்தன் தலைமை தாங்கினார். வரும் 19ம் தேதி முதல் எப்.எப்.எஸ்., செயலி மூலம் மட்டுமே மானிய விலையில் உரம் விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும், விவசாயிகள் அடையாள எண் வைத்திருப்பது கட்டாயம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையொட்டி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்கள், உர கம்பெனி டீலர்கள், உர விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பயிற்சி கூட்டம் அளிக்கப்பட்டது.

கூட்டத்தில், க்யூ.ஆர்., கோடு பயன்படுத்தி உரம் பெறும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

விவசாயிகள் தங்களது மொபைல்போனில் எப்.எப்.எஸ்., செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில், அடையாள எண்ணை பதிவு செய்த பிறகு உருவாகும் க்யூ.ஆர்.கோடு குறியீடை உரக்கடைகளில் காண்பித்து மானிய விலையில் உரங்களைப் பெறலாம்.

அடையாள எண்ணில் ஏற்கனவே பதிவு செய்துள்ள சர்வே எண்களுக்கு மட்டுமே மானிய உரங்கள் காண்பிக்கப்படும். எனவே, தங்களது நிலத்தில் உள்ள அனைத்து சர்வே எண்களும் பதிவாகியுள்ளதா என்பதை விவசாயிகள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

விடுபட்டுள்ள சர்வே எண்களை இ–சேவை மையம் அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் தங்களது முழு சாகுபடி நிலத்திற்குத் தேவையான உரங்களை மானிய விலையில் தடையின்றி பெற முடியும்.

விவசாய அடையாள எண் இல்லாதவர்கள் தங்களது நிலத்தில் உள்ள சர்வே எண்களை எப்.எப்.எஸ்., செயலியில் பதிவு செய்து உர பரிந்துரை பெறலாம். ஆண்ட்ராய்டு மொபைல் போன் இல்லாதவர்கள் அருகில் உள்ள இ–சேவை மையம் அல்லது உரம் வாங்கும் கடைக்கு நில ஆவணங்கள், ஆதார் அட்டை, அத்துடன் இணைக்கப்பட்ட மொபைல் எடுத்து சென்று பதிவு மூலம் உரங்கள் வாங்கலாம்.

குத்தகை மற்றும் கோவில் நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகள், நிலத்திற்குரிய ஆவணங்கள் மற்றும் ஆதார் எண்ணை செயலியில் பதிவேற்றம் செய்து, க்யூ.ஆர்., கோடு குறியீட்டை பெற்று மானிய விலையில் உரங்களை பெறலாம்.

இதுவரை விவசாய அடையாள எண் பெறாதவர்கள் உடனடியாக தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ள வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us