/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மழையை எதிர்பார்க்கும் மானாவாரி சாகுபடி செய்த விவசாயிகள்
/
மழையை எதிர்பார்க்கும் மானாவாரி சாகுபடி செய்த விவசாயிகள்
மழையை எதிர்பார்க்கும் மானாவாரி சாகுபடி செய்த விவசாயிகள்
மழையை எதிர்பார்க்கும் மானாவாரி சாகுபடி செய்த விவசாயிகள்
ADDED : டிச 29, 2025 06:19 AM
தியாகதுருகம்: மானாவாரி உளுந்து பயிர் தண்ணீர் இன்றி வாடுவதால் மழையை எதிர்பார்த்து விவசாயிகள் கவலையுடன் காத்திருக்கின்றனர்.
தியாகதுருகம் சுற்றுவட்டார கிராமங்களில் 2,000 ஏக்கர் பரப்பில் மானாவாரி நிலங்களில் உளுந்து பயிர் சாகுபடி செய்துள்ளனர். கடந்த அக்., மாதம் பெய்த மழை ஈரத்தை பயன்படுத்தி விதைப்பு பணிகளை முடித்தனர். அதைத் தொடர்ந்து அவ்வப்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் செடிகள் வளர்ந்து அதிக பூக்களுடன் காய்க்க துவங்கியது.
இம்மாத முதல் வாரத்தில் டிட்வா புயல் காரணமாக லேசான மழை பெய்தது. அதன் பிறகு 20 நாட்களுக்கு மேலாக மழை பெய்யாமல் இரவு நேரங்களில் பனிப்பொழிவு உள்ளது. வழக்கமாக டிச., மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்யும். அதற்கு எதிர் மாறாக பனிப்பொழிவும் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கமும் அதிகமாக இருப்பதால் உளுந்து பயிர்கள் தண்ணீர் இன்றி வாடிய நிலையில் காணப்படுகிறது.
தற்போது உளுந்து செடிகளில் பிஞ்சுகள் முதிர்வு பெறும் தருவாயில் உள்ளதால் மழை பெய்தால் மட்டுமே மகசூல் அதிகரிக்கும். வடகிழக்கு பருவ மழை இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், மழை பெய்து உளுந்து சாகுபடி செழிக்க கை கொடுக்குமா என்று விவசாயிகள் கவலையுடன் எதிர்பார்க் கின்றனர்.

