ADDED : டிச 29, 2025 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: சின்னசேலம் அடுத்த தகரை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் வேலு, 41; நெல் அறுவடை இயந்திர டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, சின்னசேலம் நோக்கி தனது பைக்கில் சென்றார்.
சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மூங்கில்பாடி பிரிவு ரோடு அருகே சென்றபோது சென்னை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த தமீம்அன்சாரி என்பவர் ஓட்டி வந்த கார் வேலு ஓட்டி வந்த பைக் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த வேலு சம்பவ இடத்திலே இறந்தார். தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார் வேலுவின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

