/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரம் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் வேண்டும் மக்கள் கோரிக்கை

ADDED : டிச 29, 2025 06:15 AM
சங்கராபுரம்: சங்கராபுரம் பஸ் நிலைய த்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சங்கராபுரம் சுற்றியுள்ள ஏராளமான கிராம மக்கள், தினசரி பணிகள் மற்றும் தேவைகளுக்காக சங்கராபுரம் பஸ் நிலையம் வந்து செல்கின்றனர்.
நுாற்றுக்கணக்கான பயணிகள் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கின்றனர். பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பஸ் ஏறும்போதும், இறங்கும் போதும் பிக் பாக்கெட் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
கடந்த வாரம், இரு பெண்களிடம் 5 கிராம் தங்க நகை அபேஸ் செய்யப்பட்டது.
விரியூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கராபுரம் இந்தியன் வங்கியிலிருந்து செலவுக்கு ரூ.20 ஆயிரம் பென்ஷன் எடுத்துக்கொண்டு பஸ்சுக்காக காத்திருந்தபோது, அவரிடமிருந்து பண பையை 15 வயது சிறுவன் பறித்து கொண்டு தப்பியோடினார். மேலும் சங்கராபுரம் பஸ் நிலையத்தில் அரசு பள்ளி மாணவர்கள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., மாணவர்கள் அடிக்கடி சாதி பிரச்னை காரணமாக மோதிக்கொள்ளும் சம்பவமும் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்தும் வகையில் சங்கராபுரம் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைத்து பாதுகாப்பு வழங்கிட எஸ்.பி., துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.