ADDED : ஆக 12, 2025 11:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: பொரசக்குறிச்சியில் கல்லுாரிக்கு சென்றபோது மாயமான இளம்பெண் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த பொரசக்குறிச்சி யை சேர்ந்தவர் அம்மாசி மகள் திரிஷா, 22; அரசு கல்லுாரியில் எம்.ஏ., ஆங்கிலம் 2ம் ஆண்டு படிக்கிறார். கடந்த 8ம் தேதி வழக்கம்போல் கல்லுாரிக்கு சென்ற திரிஷா, மாலை நீண்ட நேமாகியும் வீடு தி ரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காததால் காணாமல் போன மகள் திரிஷாவை கண்டுபிடித்து தரக்கோரி, அவரது தந்தை அம்மாசி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.