/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குடும்ப தகராறில் பெண் தற்கொலை
/
குடும்ப தகராறில் பெண் தற்கொலை
ADDED : செப் 20, 2024 08:28 PM
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே குடும்பத் தகராறில் இளம்பெண் துாக்கு போட்டு இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் மனைவி அபி, 21; திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. நாகராஜிக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக அபி கேட்டதால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இதுகுறித்து அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த அபி, வீட்டில் புடவையால் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். திருமணமான இரண்டே ஆண்டில், அபி இறந்ததால் ஆர்.டி.ஓ., விசாரணை நடக்கிறது.