/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் ஐம்பெரும் விழா
/
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் ஐம்பெரும் விழா
ADDED : நவ 24, 2025 07:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: சின்னசேலம் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா நடந்தது.
சின்னசேலம் வாசவி மகாலில் நடந்த நிகழ்ச்சியில் கணபதி ஹோமம், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை, சுவாமி வீதியுலா, சிறப்பு தீபாரதனை நடந்தது. தொடர்ந்து ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, ஐயப்ப பக்தர்களின் பஜனை நடந்தது. பின்னர் சுவாமி குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

