/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பைக் திருட்டு போலீசில் புகார்
/
பைக் திருட்டு போலீசில் புகார்
ADDED : நவ 24, 2025 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பைக்கை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த செங்குறிச்சி சேர்ந்த கோதண்டபாணி மகன் சுரேஷ்குமார்,37; இவர் திருநாவலுார் போலீஸ் ஸ்டேஷனில் தகவல் பதிவு உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 3ம் தேதி தனது உறவினரின் மோட்டார் பைக்கில் கள்ளக்குறிச்சிக்கு வந்த சுரேஷ்குமார், ஏமப்பேர் முருகன் கோவில் அருகே நிறுத்தி விட்டு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது பைக் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து சுரேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

