/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உளுந்துார்பேட்டை எம்.எல்.ஏ., இயக்கி வைத்த டிரான்ஸ்பார்மர் எப்போது செயல்படும்?

ADDED : நவ 24, 2025 07:03 AM

உளுந்துார்பேட்டை:
உளுந்துார்பேட்டை அருகே எம்.எல்.ஏ., இயக்கி வைத்த ட்ரான்ஸ்பார்மருக்கு சப்ளை கொடுக்காமல் காட்சி பொருளாக உள்ளது, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உளுந்துார்பேட்டை அடுத்த அஜீஸ்நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த சில மாதங்களாக குறைந்த அழுத்த மின்னோட்டத்தால் மின்சாரம் அடிக்கடி தடை ஏற்பட்டு வந்தது. மின் சாதனங்களும் பழுதடைந்து வந்தது.
இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் மின்சாரம் சீராகவும், தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதன் பேரில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கூடுதலாக 25 கிலோ வோல்ட் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.
எம்.எல்.ஏ., மணிக்கண்ணன், மின்வாரிய உயர் அதிகாரிகள் தலைமையில் இயக்கி வைக்கப்பட்டது. டிரான்ஸ்பார்மர் இயக்கி வைத்து, செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. அந்த ட்ரான்ஸ்பார்மருக்கு உயர் மின் அழுத்த மின் கம்பத்திலிருந்து மின் இணைப்பு வழங்கப்படாமல் நான்கு மாதங்களாக காட்சி பொருளாகவே உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
புதியதாக பொறுத்தப்பட்டுள்ள டிராஸ்பார்மரை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு, மின்துறை அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.