/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட பணி கள்ளக்குறிச்சியில் கலெக்டர் கள ஆய்வு
/
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட பணி கள்ளக்குறிச்சியில் கலெக்டர் கள ஆய்வு
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட பணி கள்ளக்குறிச்சியில் கலெக்டர் கள ஆய்வு
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட பணி கள்ளக்குறிச்சியில் கலெக்டர் கள ஆய்வு
ADDED : செப் 19, 2024 11:54 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வட்டத்தில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' சிறப்பு திட்ட பணிகள் குறித்து கலெக்டர் பிரசாந்த் நேற்று கள ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி வட்டத்தில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' சிறப்பு திட்டம் பணிகள் குறித்து கள ஆய்வு நடந்து வருகிறது. இரண்டாம் நாளான நேற்றுகள்ளக்குறிச்சி நகராட்சி பகுதிகளில் நேரடி கள ஆய்வு செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் துாய்மை பணிகள், பசுமை உரப் பூங்கா, வார்டு எண்-1ல் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி, ஊராட்சி ஒன்றிய பெண்கள் தொடக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்ட சமயலறைக் கூடம், காய்கறி சந்தை, உழவர் சந்தை, பஸ் நிலையம், நுாலகம், பசுமை உரப் பூங்கா, மக்கு உரத் திடல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஆய்வில் நகரைத்துாய்மையாக பராமரிக்கவும், பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கிடவும், மாணவ, மாணவியர்களுக்கு சுகாதாரமான முறையிலும் உணவு வழங்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
இதனை உணர்ந்து மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்தார். ஆய்வின்போது, நகராட்சி ஆணையாளர் மகேஷ்வரி, தாசில்தார் கமலக்கண்ணன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.