/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஹார்டுவேர் கடையில் தீ விபத்து ரூ.15 லட்சம் பொருட்கள் சேதம்
/
ஹார்டுவேர் கடையில் தீ விபத்து ரூ.15 லட்சம் பொருட்கள் சேதம்
ஹார்டுவேர் கடையில் தீ விபத்து ரூ.15 லட்சம் பொருட்கள் சேதம்
ஹார்டுவேர் கடையில் தீ விபத்து ரூ.15 லட்சம் பொருட்கள் சேதம்
ADDED : நவ 02, 2025 04:13 AM
தியாகதுருகம்: தியாகதுருகம் ஹார்ட்வேர் கடையில் மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சேதம் அடைந்தது.
தியாதுருகம் கலைஞர் நகரைச் சேர்ந்த சரவணன், 48; இவர், திருக்கோவிலுார் சாலையில் உள்ள மார்க்கெட் கமிட்டி அருகே ஹார்டுவேர் கடை வைத்துள்ளார்.
இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றார். நள்ளிரவு 12:00 மணிக்கு கடைக்குள் மின் கசிவு ஏற்பட்டதில் தீ பிடித்தது.
பெயிண்ட் டப்பாக்கள் அதிகம் இருந்ததால் அவற்றில் தீ பரவி கொழுந்து விட்டு எரிய துவங்கியது.
தகவல் அறிந்து சென்ற தியாகதுருகம் மற்றும் ரிஷிவந்தியம் தீயணைப்பு வீரர்கள் மாவட்ட தீயணைப்பு அலுவலர் இருசம்மாள் தலைமையில் தீயை அணைக்க போராடினர். பெயிண்ட் என்பதால் தீ அணையாமல் தொடர்ந்து எரிந்தது.
இதையடுத்து ரசாயன நுரை கலவையை கலந்து நீரில் பீய்ச்சு அடித்தனர். அதன் பின்னரே தீ ஓரளவு கட்டுக்குள் வந்தது. 2 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள் 2:10 மணிக்கு தீயை முற்றிலும் அணைத்தனர். இவ்விபத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.
விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

