/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சத்துணவு பணியாளர்களுக்கு தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி
/
சத்துணவு பணியாளர்களுக்கு தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி
சத்துணவு பணியாளர்களுக்கு தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி
சத்துணவு பணியாளர்களுக்கு தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி
ADDED : பிப் 15, 2026 06:17 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பி.டி.ஓ., அலுவலகத்தில் சத்துணவு பணியாளர்களுக்கு தீயணைப்பு துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார். சிறப்பு நிலைய அலுவலர் பழனிவேல் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மாயகிருஷ்ணன், செல்வகுமார் ஆகியோர் தீத்தடுப்பு குறித்து விளக்கி பேசினர். வீடு மற்றும் பணியிடங்களில் உணவு சமைக்கும் போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்படும் பட்சத்தில், பதற்றமடைய கூடாது, தீ அருகில் உள்ள பொருட்களில் பரவாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள், தீயிணை அணைத்தல், தீ தடுப்பு உபகரணங்களை பயன்படுத்துதல், சிலிண்டரில் காஸ் கசிவு ஏற்பட்டால் கையாளும் விதம் குறித்து விளக்கி கூறினர். தொடர்ந்து, செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சத்துணவு பணியாளர்கள், தீயணைப்பு குழுவினர் கலந்து கொண்டனர்.

