/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : அக் 13, 2025 10:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
தீ பாதுகாப்பு அறிவோம், உயிர்களை காப்போம் என்னும் தலைப்பில் நடந்த தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, நிலைய அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார். சிறப்பு நிலைய அலுவலர் வீரபாண்டியன் முன்னிலை வகித்தார். காஸ் கசிவு, மழை காலத்தில் மின் சாதனங்களை கையாளும் விதம், விபத்தின்றி பட்டாசு வெடித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தீ விபத்து ஏற்பட்டால் பதட்டமின்றி கையாளும் விதம், பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது குறித்து செயல் விளக்க பயிற்சி மூலம் செய்து காண்பிக்கப்பட்டது.