/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தீயணைப்பு நிலைய கட்டடம்: ரிஷிவந்தியத்தில் திறப்பு விழா
/
தீயணைப்பு நிலைய கட்டடம்: ரிஷிவந்தியத்தில் திறப்பு விழா
தீயணைப்பு நிலைய கட்டடம்: ரிஷிவந்தியத்தில் திறப்பு விழா
தீயணைப்பு நிலைய கட்டடம்: ரிஷிவந்தியத்தில் திறப்பு விழா
ADDED : மார் 06, 2024 10:12 PM

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியத்தில் தீயணைப்பு நிலைய கட்டடத்தை கலெக்டர், எம்.எல்.ஏ., திறந்து வைத்தனர்.
ரிஷிவந்தியத்தில் தீயணைப்பு நிலைய கட்டட திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, கள்ளக்குறிச்சி தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினர்.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன்(பொ), சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், அசோக்குமார், மாவட்ட துணை செயலாளர் அண்ணாதுரை முன்னிலை வகித்தனர். உதவி மாவட்ட அலுவலர் ஜமுனாராணி வரவேற்றார். புதிய தீயணைப்பு நிலையம் அமைக்க ரூ.181.32 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
இதையொட்டி, முதற்கட்டமாக தற்காலிக தீயணைப்பு நிலைய கட்டடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கேற்றப்பட்டது. தொடர்ந்து, தீயணைப்பு வாகனம் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராஜி, பொதுக்குழு உறுப்பினர் ராஜி, ஊராட்சி தலைவர்கள் வினிதா மகேந்திரன், ராமமூர்த்தி, தொழிலாளரணி மாவட்ட தலைவர் சிவமுருகன், கிளை செயலாளர் கண்ணன் உட்பட பலர் திரளாக பங்கேற்றனர்.

