/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இட்லி தட்டில் சிக்கிய சிறுமி விரல் தீயணைப்பு துறையினர் மீட்பு
/
இட்லி தட்டில் சிக்கிய சிறுமி விரல் தீயணைப்பு துறையினர் மீட்பு
இட்லி தட்டில் சிக்கிய சிறுமி விரல் தீயணைப்பு துறையினர் மீட்பு
இட்லி தட்டில் சிக்கிய சிறுமி விரல் தீயணைப்பு துறையினர் மீட்பு
ADDED : நவ 19, 2025 08:08 AM

கள்ளக்குறிச்சி: இட்லி தட்டில் சிக்கிக்கொண்ட சிறுமியின் விரலை தீயணைப்பு துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்., நகரை சேர்ந்தவர் ஆசிப் மகள் மிஸ்ரா, 2; இவர், நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் இட்லி தட்டு வைத்து விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, மிஸ்ராவின் இடது கை ஆள்காட்டி விரல், இட்லி தட்டின் மையப்பகுதியில் சிக்கிக்கொண்டது.
உடன் வலியால் மிஸ்ரா கதறி அழுதார். இதைப்பார்த்த பெற்றோர்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் இட்லி தட்டில் சிக்கிய விரலை மீட்க முடியவில்லை. அவரது பெற்றோர்கள் மிஸ்ராவை கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு தீயணைப்பு வீரர்கள் சாதுரியமாக செயல்பட்டு, மின்சார கட்டர் இயந்திரத்தை பயன்படுத்தி இட்லி தட்டினை உடைத்து மிஸ்ரா விரலை பத்திரமாக மீட்டனர். மேலும், 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மிஸ்ராவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.