/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நில அளவை அலுவலர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தம் துவக்கம்
/
நில அளவை அலுவலர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தம் துவக்கம்
நில அளவை அலுவலர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தம் துவக்கம்
நில அளவை அலுவலர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தம் துவக்கம்
ADDED : நவ 19, 2025 08:08 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் துவங்கியது. களப்பணியாளர்கள் பணிச்சுமையை போக்கி, பணிகளை முறைப்படுத்துதல், தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவிகளை மீண்டும் வழங்குதல், ஒப்பந்த முறை பணி நியமனத்தை முற்றிலுமாக கைவிடுதல், நில அளவர் பணியிடங்களை நிரப்பி, ஊதிய முரண்பாடுகளை களைதல், வட்டம், குறுவட்டம், நகர சார் ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 58 களப்பணியாளர்கள் உட்பட 65 பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் எதிரே இன்று 19 ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.