/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்
/
திருக்கோவிலுார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்
திருக்கோவிலுார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்
திருக்கோவிலுார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்
ADDED : ஜூலை 08, 2025 10:50 PM

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவக்க விழா நடந்தது.
கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் வரவேற்றார். கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கி, மாணவர்களை வரவேற்று பேசினார்.
செயலாளர் ஏழுமலை, பொருளாளர் சுப்ரமணியன், துணைத் தலைவர் முஸ்டாக் அகமது, தாளாளர் பழனிராஜ், முன்னாள் தாளாளர் கல்யாணசுந்தரம், அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். பேராசிரியர்கள் நாகித், மேரி, ஆர்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
கல்லுாரி நிர்வாக அலுவலர் குமார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பேராசிரியர் மீனாட்சி நன்றி கூறினார்.