/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மதுபாட்டில் விற்ற ஐந்து பேர் கைது
/
மதுபாட்டில் விற்ற ஐந்து பேர் கைது
ADDED : செப் 19, 2024 11:53 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்டத்தில் மதுபாட்டில் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட போலீசார் கடந்த 17 ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கரடிசித்துார் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் ராம்தேவ்,28; என்பவர் மதுபாட்டில் விற்றது தெரிந்தது.
தொடர்ந்து, கச்சிராயபாளையம் போலீசார் ராம்தேவை கைது செய்து, அவரிடமிருந்த 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், கள்ளக்குறிச்சி வி.ஐ.பி., கார்டன் பகுதியில் மதுபாட்டில் விற்ற காமராஜ்,60; என்பவரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்து, 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சின்னசேலம் மார்க்கெட் கமிட்டி பகுதியில் மதுபாட்டில் விற்ற அதே பகுதியை சேர்ந்த வையாபுரி மகன் ராமராஜன்,37; பெருமாள் மகன் சுரேஷ்,42; கலியபெருமாள் மகன் நாகராஜன்,41; ஆகிய 3 பேரையும் கைது செய்து, 10 மதுபாட்டில்கள், ரூ.300 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.