UPDATED : அக் 26, 2026 03:05 PM
ADDED : அக் 26, 2026 03:02 PM

சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் சன்மார்க்க கொடி நாள் விழா நடந்தது.
மன்ற பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சந்திரசேகரன், அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், ஓய்வூதியர் சங்க தலைவர் கலியமுர்த்தி முன்னிலை வகித்தனர். நகை வணிகர் ராஜசேகர் வரவேற்றார்.
ஆசிரியர் இளையாபிள்ளை, ரோட்டரி முன்னாள் தலைவர் முர்த்தி சங்கை குறிஞ்சி தமிழ் சங்க துணைத் தலைவர் ஜெயபிரகாஷ் முன்னிலையில் அகவல் படித்து உலக அமைதிக்காக பிரார்த்திக்கப்பட்டது. டாக்டர் நாச்சியப்பன் சன்மார்க்க கொடி ஏற்றினார்.
திருக்குறள் பேரவை செயலாளர் லட்சுமிபதி வாழ்த்திப் பேசினார். அரிமா மாவட்ட தலைவர் வேலு, ராஜா, பழனியாபிள்ளை, மோட்டார் வாகன சங்கத் தலைவர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
நெடுஞ்செழியன் நன்றி கூறினார்.
