/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நாட்டுப்புற கலைஞர்கள் சங்க செயற்குழு கூட்டம்
/
நாட்டுப்புற கலைஞர்கள் சங்க செயற்குழு கூட்டம்
ADDED : நவ 10, 2025 03:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு, மாநில துணை தலைவர் மாரியாப்பிள்ளை தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஆண்டி, செயலாளர் கவுதம், கவுரவ தலைவர் வரதராஜ், பொருளாளர் இளங்கோவன், தலைமை ஆலோசகர் கருப்பையா முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் சங்க மாவட்ட மாநாடு நடத்துவது, நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு ஓய்வூதியம் வழங்கல் தொடர்பாக ஆலோசனை நடந்தது. தொடர்ந்து, சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நாட்டுப்புற கலைஞர்கள் பலர் பங்கேற்றனர்.

