/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முன்னாள் எம்.எல்.ஏ., நினைவு தினம்
/
முன்னாள் எம்.எல்.ஏ., நினைவு தினம்
ADDED : செப் 20, 2024 09:51 PM

திருக்கோவிலுார் : முன்னாள் எம்.எல்.ஏ., சிவராஜ் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.
முன்னாள் எம்.எல்.ஏ., சிவராஜ் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பஸ் நிலையம் அருகே அலங்கரிக்கப்பட்ட பந்தலில் வைக்கப்பட்ட அவரது படத்திற்கு உறவினர்கள், ஆதரவாளர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து வடக்கு வீதியில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களுக்கு போர்வை, பாய் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. சாரதா வித்யாஷ்ரம் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளுக்கு பள்ளியின் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தாளாளர் பிரபு முன்னிலை வகித்தார். அ.ம.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், உறவினர்கள் பங்கேற்றனர்.