/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரூ.4.88 கோடியில் தாலுகா அலுவலகம்; வாணாபுரத்தில் அடிக்கல் நாட்டு விழா

ADDED : அக் 13, 2025 11:15 PM

ரிஷிவந்தியம்; வாணாபுரத்தில் ரூ. 4.88 கோடி மதிப்பில் புதிய தாலுகா அலுவலக கட்டடம் கட்டும் பணி துவக்க விழா நேற்று நடந்தது.
வாணாபுரத்தில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.4.88 கோடி மதிப்பில் 3 தளங்களுடன் புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட உள்ளது. அலுவலகத்தில் தாசில்தார் அறை, அலுவலக அறை, பதிவறை, கூட்டரங்கம், நில அளவையர், கணினி அறை, 'லிப்ட்' வசதி, மாற்றுத்திறனாளிகள், ஆண் மற்றும் பெண் கழிவறைகள் கட்டப்பட உள்ளது. கட்டுமான பணியை கலெக்டர் பிரசாந்த், வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர்.
தாசில்தார் வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட சேர்மன் புவனேஷ்வரி பெருமாள், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மாலா, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், பாரதிதாசன், அசோக்குமார், ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமி சுப்ரமணியன், துணை சேர்மன் சென்னமாள் அண்ணாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி தலைவர் தீபா அய்யனார் நன்றி கூறினார்.