/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓய்வுபெற்ற ஆசிரியர் நல சங்க மாவட்ட மாநாடு
/
ஓய்வுபெற்ற ஆசிரியர் நல சங்க மாவட்ட மாநாடு
ADDED : அக் 14, 2025 04:58 AM

சங்கராபுரம்; ஓய்வு பெற்ற பள்ளி கல்லுாரி ஆசிரியர் நல சங்க 2ம் மாவட்ட மாநாடு நடந்தது.
ஓய்வுபெற்ற டி.இ.ஓ., ஆரோக்கியசாமி, மாநில பொதுச் செயலாளர் பர்வதராஜன் சங்க கொடி ஏற்றினர். மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் குணசேகரன் மாநாட்டு அறிக்கை தாக்கல் செய்தார். மாநில பொதுச் செயலாளர் பர்வதராஜன், சங்கராபுரம் ஓய்வூதியர் சங்க வட்ட தலைவர் கலியமூர்த்தி, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயலாளர் ரஹீம், மாவட்ட செயலாளர் ஜாகீர் உசேன், வட்ட செயலாளர் தாஸ், ஊரக வளர்ச்சி துறை மாவட்ட தலைவர் சீனுவாசன் உரையாற்றினர். 70 வயது முடிந்த ஓய்வுபெற்றவர்களுக்கு 10 சதவீதம் ஊதிய உயர்வு வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.