ADDED : அக் 26, 2024 07:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: சிறுவத்துார் அரசு மாதிரி பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவத்துார் அரசு மாதிரி பள்ளி 11ம் வகுப்பு மாணவர்கள் 69 பேருக்கு மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி தலைமை தாங்கி இலவச சைக்கிள் களை வழங்கினார். தலைமை ஆசிரியை திலகவதி முன்னிலை வகித்தனர்.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் துரைசாமி வரவேற்றார்.மாவட்ட அவைத் தலைவர் ராமமூர்த்தி, ஒன்றிய துணைச் சேர்மன் விமலா முருகன், மாவட்ட கவுன்சிலர் முருகேசன், மாவட்ட பிரதிநிதி ஆதி, ஊராட்சி தலைவர் பாலாயி கணேசன், துணைத் தலைவர் ஜானகிராமன் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.