/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இலவச சைக்கிள்கள் பிட்டிங் பணி 'ஜரூர்'
/
இலவச சைக்கிள்கள் பிட்டிங் பணி 'ஜரூர்'
ADDED : செப் 22, 2024 06:10 AM

சங்கராபுரம், : சங்கராபுரம் தாலுகாவில் உள்ள அரசு பள்ளிகளுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட உள்ள இலவச சைக்கிள்கள் பிட்டிங் செய்யும் பணி ஜரூராக நடந்து வருகிறது.
அரசு பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச சைக்கிள்கள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பஞ்சாப் மாநிலம், லுாதியானவில் இருந்து லாரிகள் முலம் சைக்கிள் உதிரி பாகங்கள் சங்கராபுரம் பெண்கள் பள்ளி வளாகத்தில் இறக்கப்பட்டுள்ளது.
இங்கு, வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கடந்த 15 நாட்களாக சைக்கிள் உதிரி பாகங்களை பிட்டிங் (பொருத்தும்) பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பணிகள் முடிந்ததும் சங்கராபுரம் தாலுகாவில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சைக்கிள்கள் அனுப்பி வைக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.