தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு


ADDED : பிப் 07, 2024 07:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2024 07:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி : இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 10ம் தேதி முதல் நடைபெற உள்ளது.

கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெறும் தேர்வுக்கு https://www.tnpsc.gov.in/ இணையதளத்தில் வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த போட்டி தேர்வர்கள் பயனடையும் வகையில், வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகளும், முழு மாதிரி தேர்வுகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் வரும் 10ம் தேதி பயிற்சி வகுப்புகள் துவங்குகிறது.

தொடர்ந்து, வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ள போட்டி தேர்வர்கள் தங்களது புகைப்படம், ஆதார் எண் ஆகிய விபரங்களுடன் கள்ளக்குறிச்சி நேப்பால் தெருவில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் 8ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us