/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரகண்டநல்லூரில் இலவச கண் பரிசோதனை முகாம்
/
அரகண்டநல்லூரில் இலவச கண் பரிசோதனை முகாம்
ADDED : அக் 02, 2024 11:29 PM
திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் பிரதாப்மால் தேஜ்ராஜ் நினைவு அறக்கட்டளை, திருக்கோவிலூர் மகாவீர் பேன்சி ஸ்டோர், ரமேஷ் ஜுவல்லர்ஸ், பாலமந்திர் பள்ளி இணைந்து அரவிந்த் கண் மருத்துவமனை உதவியடன் பள்ளி வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
இதில் 191 பேர் கலந்து கொண்டனர். அரவிந்த் கண் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவ குழுவினர் முகாமில் பங்கேற்றவர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டனர். 40 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தேஜ்ராஜ் நினைவு அறக்கட்டளை தலைவர் பனாலால், தன்னார்வலர்கள் ரமேஷ், மகாவீர்சந்த், நித்தேஷ், நிர்மல் குமார், பால மந்திர் பள்ளி தாளாளர் அக்பர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.