ADDED : ஏப் 23, 2025 11:03 PM
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் காவல் சார்பு ஆய்வாளர்கள் பதவி தேர்வுக்கான இலவச பயிற்சியில் பங்கேற்க, கலெக்டர் பிரசாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், 2025ம் ஆண்டுக்கான காவல் சார்பு ஆய்வாளர்கள் பதவிக்கான1,299 காலிப்பணியிடங்களுக்கு நேரடி தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இத்தேர்வுக்கு www.tnusrb.yn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும், மே., 3 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 30ம் தேதி முதல் வார கள்ளக்குறிச்சி வேலைவாய்ப்பு அலவலகத்தில் நடத்தப்படுகிறது.விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு வரும் 28 ம் தேதிக்குள் விவரத்தினை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04151 295422 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

