ADDED : பிப் 12, 2025 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்; சங்கராபுரம் அடுத்த வாழவச்சனுார் கிராமத்தில் அரசு வேளாண்மை கல்லுாரி உள்ளது. இக் கல்லுரியில் விவசாயிகளுக்கு இலவசமாக மர கன்றுகள் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து கல்லுரி வனவியல் உதவி பேராசிரியர் வெண்ணிலா விடுத்துள்ள செய்திக்குறிப்பு
வாழவச்சனுார் வேளாண்மை கல்லுரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வரப்புகளில் நடவு செய்ய தேக்கு மர கன்றுகள்,சந்தனம் மரகன்று ஏக்கருக்கு 160, மகாகனி ஏக்கருக்கு 65 கன்றுகள்,மலைவேம்பு மற்றும் வேம்பு,வேங்கை ஏக்கருக்கு 500 கன்றுகள்,செம்மரம் ஏக்கருக்கு 200 கன்றுகள் வீதம் வழங்கப்படும்.
தேவையான விவசாயிகள் நிலத்தின் சிட்டாவுடன் ஆதார் நகலுடன் வந்து பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

