ADDED : மார் 27, 2025 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு ஆரோக்கிய பாரதி மற்றும் பாரத மாதா சேவை அறக்கட்டளை சார்பில், இலவச யோகா வகுப்பு துவங்கியது.
அண்ணா நகர் பாரத மாதா நுாலகத்தில், யோகா வகுப்புகளை தமிழ்நாடு ஆரோக்கிய பாரதி மாநில அமைப்பு செயலாளர் ராஜதுரை தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர் அருண், செயலாளர் பாலாஜி, கோகுல், விஜயகாந்த் முன்னிலை வகித்தனர். நாள்தோறும் காலை 6:30 முதல் 7:30 மணிவரை, 21 நாட்களுக்கு வகுப்புகள் நடக்கின்றன. பொதுமக்களுக்கு சர்க்கரை வியாதி வராமல் தடுக்கும் முயற்சியாக, இலவச வகுப்புகள் நடத்தப்படுவதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர்.