/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பழப்பயிர் சாகுபடி கருத்தரங்கு
/
பழப்பயிர் சாகுபடி கருத்தரங்கு
ADDED : ஜூலை 22, 2025 06:29 AM

கள்ளக்குறிச்சி: தோட்டக்கலைத்துறை சார்பில் பழப்பயிர் சாகுபடி குறித்த கருத்தரங்கு நடந்தது.
கருத்தரங்கிற்கு, டி.ஆர்.ஓ., ஜீவா தலைமை தாங்கினார். சங்கராபுரம் ஒன்றிய சேர்மன் ரோஜாரமணி, வேளாண் இணை இயக்குனர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தனர். மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சிவக்குமார் வரவேற்றார்.
தோட்டக்கலை துறை விஞ்ஞானி ஷர்மிளா பாரதி, பூச்சியியல் துறை வல்லுனர் ராஜபாஸ்கர் ஆகியோர் பழப்பயிர் சாகுபடி குறித்த கருத்தரங்கினை துவக்கி வைத்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உதயசூரியன் எம்.எல்.ஏ., கருத்தரங்கினை பார்வையிட்டு பழப்பயிர் சாகுபடியின் தேவை மற்றும் சிறப்புகள் குறித்து பேசினார். 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். சங்கராபுரம் தோட்டக்கலை உதவி இயக்குனர் சத்தியராஜ் நன்றி கூறினார்.