/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தப்பி ஓடிய கஞ்சா வியாபாரி கைது
/
தப்பி ஓடிய கஞ்சா வியாபாரி கைது
ADDED : மார் 22, 2025 04:03 AM

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அருகே தப்பி ஓடிய கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலுார் - விழுப்புரம் மெயின் ரோட்டில், அரகண்டநல்லுார், வீர அய்யனார் கோவில் அருகே கஞ்சா விற்பனை நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த, 9ம் தேதி இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது மற்றும் போலீசார் கஞ்சா விற்ற மகாலிங்கம் மகன் நாராயணன், 28; ஸ்டீபன் மகன் மகிமை ராஜ், 19; தீர்த்தமலை மகன் அமல்ராஜ், 25; ஆகியோரை கைது செய்தனர்.
அப்போது அங்கிருந்து, ஏழுமலை மகன் பிரபாகரன், 25; தப்பி ஓடி விட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்து, மூவரை சிறையில் அடைத்த போலீசார், தப்பி ஓடியவரை தேடி வந்தனர். அவர் பெங்களூருவில் பதுங்கி இருந்த நிலையில், நேற்று போலீசார் அவரை கைது செய்தனர்.