/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினரின் 'லிப்ட்' வசதி கோரிக்கை நிறைவேற்றம்
/
மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினரின் 'லிப்ட்' வசதி கோரிக்கை நிறைவேற்றம்
மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினரின் 'லிப்ட்' வசதி கோரிக்கை நிறைவேற்றம்
மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினரின் 'லிப்ட்' வசதி கோரிக்கை நிறைவேற்றம்
ADDED : ஜன 02, 2026 04:11 AM

தியாகதுருகம்: தியாகதுருகம் பேரூராட்சி அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி நியமன உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று, அலுவலகத்தின் முதல் மாடிக்கு செல்ல 'லிப்ட்' வசதி ஏற்படுத்தி தர தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தியாகதுருகம் பேரூராட்சியின் நியமன உறுப்பினராக கருணாகரன் கடந்த 2 மாதங்களுக்கு முன் தேர்வு செய்யப்பட்டார்.
முதுகு தண்டுவட பாதித்த மாற்றுத் திறனாளியான கருணாகரன், பேரூராட்சி அலுவலகத்தின் முதல் மாடியில் நடைபெறும் பேரூராட்சி கூட்டத்தில் மாடிப்படியேறி சென்று கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் முதல் மாடிக்கு செல்ல 'லிப்ட்' வசதி வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதற்கு பேரூராட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டதையடுத்து, பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
மேலும், அலுவலகத்தில் 'லிப்ட்' வசதி ஏற்படுத்திக் கொடுக்க, பொதுநிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் விரைவில் துவங்க உள்ளது.
இதையடுத்து, மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் கருணாகரன் தனது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றியதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து நேற்று நடந்த கூட்டத்தில் பேசினார்.
பேரூராட்சி சேர்மன் வீராசாமி, துணை சேர்மன் சங்கர், செயல் அலுவலர் சம்பத்குமார், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்,.

