/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ராமானுஜம் பிறந்த நாள் அறிவுத்திறன் போட்டி
/
ராமானுஜம் பிறந்த நாள் அறிவுத்திறன் போட்டி
ADDED : ஜன 02, 2026 04:10 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியில் கணிதமேதை ராமானுஜம் பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு அறிவுத்திறன் போட்டி நடந்தது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் வரவேற்றார். கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.
செயலாளர் ஏழுமலை, பொருளாளர் சுப்ரமணியன், துணைத் தலைவர் முஸ்டாக் அகமது, தாளாளர் பழனிராஜ் மற்றும் கல்லுாரி துணை முதல்வர் மீனாட்சி, நிர்வாக அலுவலர் குமார் கலந்து கொண்டு ராமானுஜரின் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தி அவரது கணித திறமை குறித்து பேசினர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லுாரி தலைவர் செல்வராஜ் பரிசு வழங்கி பாராட்டினார்.
பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
பேராசிரியர் ஜோதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பேராசிரியர் விக்னேஷ் நன்றி கூறினார்.

