/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
காங்., துண்டு பிரசுரம் வழங்கல்
/
காங்., துண்டு பிரசுரம் வழங்கல்
ADDED : ஜன 09, 2026 07:40 AM

சங்கராபுரம்: நெடுமானுாரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை நீக்கிய மத்திய அரசை கண்டித்து காங்., சார்பில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சங்கராபுரம் அடுத்த நெடுமானுாரில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் பாக்கியம் நாகராஜன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் பிரபு, விவசாய பிரிவு மாவட்ட தலைவர் நாராயணன், மாணவர் காங்., மாநில பொது செயலாளர் ஆதில்கான், மாவட்ட தலைவர் தங்க தமிழன் வரவேற்றார். மாவட்ட காங்., துணை தலைவர் இதயத்துல்லா 100 நாள் வேலை திட்ட பணியாளர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் மாணவர் காங். மாவட்ட பொது செயலாளர் அப்பாஸ், சேகர், நவாஸ்கான் உட்பட பலர் பங்கேற்றனர். தொகுதி தலைவர் தேவேந்திரன் நன்றி கூறினார்.

