/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பாலிடெக்னிக் கல்லுாரியில் லேப்டாப் வழங்கும் விழா
/
பாலிடெக்னிக் கல்லுாரியில் லேப்டாப் வழங்கும் விழா
பாலிடெக்னிக் கல்லுாரியில் லேப்டாப் வழங்கும் விழா
பாலிடெக்னிக் கல்லுாரியில் லேப்டாப் வழங்கும் விழா
ADDED : ஜன 09, 2026 07:40 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் விலையில்லா லேப்டாப்களை உதயசூரியன் எம்.எல்.ஏ., வழங்கினார்.
சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் இறுதியாண்டு பயிலும், மாணவ, மாணவிகளுக்கு அரசின் லேப்டாப் வழங்கும் விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் லலிதா தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் திலகவதி நாகராஜன், பேரூராட்சி தலைவர் ரோஜாரமணி, ஒன்றிய செயலாளர் கதிரவன், நகர செயலாளர் துரை தாகப்பிள்ளை முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சங்கராபுரம் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு 177 மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப்களை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் கல்லுாரி துணை முதல்வர் சிவகங்கா, பொருளாளர் பாலசுப்ரமணியம் மற்றும் கல்லுாரி துறை தலைவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். கார்த்திக் நன்றி கூறினார்.